அணு ஆயுதத்தை எப்போது பயன்படுத்துவோம் தெரியுமா? – ரஷியா அதிபர் விடுத்த எச்சரிக்கை

0
441

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமாக வெடித்துள்ளது. பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஷியா தொடர்ந்து போரை தொடுத்து வருகிறது.

மேலும், இந்த போர் மூன்றாம் உலகக்போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துவருகிறார். இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

அணு ஆயுதம் பயன்படுத்துவோம்

இந்நிலையில், செய்தியாளர்களை ரஷிய அதிபர் மாளிகை சந்திக்கையில், அணு ஆயுத போருக்கான கேள்விக்கு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது.

அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள். ரஷியா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.