பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் ஒத்துழைப்பைக் கட்டாயம் பெற வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

0
445

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பைக் கட்டாயம் பெற வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர். அரசு மீது கடும் எதிர்ப்பை வெளியிடவும் ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்.

எனவே, இப்பிரச்சினையிலிருந்து மீள்வதற்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். எனது ஆட்சியில் இப்படி நடக்கவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

வீதி அமைக்கும் பணிகளை இந்த அரசு உடன் நிறுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.