இராணுவத்திற்கான செலவுகளை பெருமளவில் குறைக்க வேண்டும்! சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதிய கடிதத்தில் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

0
491

சர்வதேச நாணய நிதியத்திற்கு தான் எழுதிய கடிதத்தில் இலங்கை தனது நிதி நிலைமையினை மேம்படுத்துவதற்காக இராணுவத்திற்கான செலவுகளை பெருமளவில் குறைக்க வேண்டும் என வலியுறுத்துமாறு கூறியதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியவசிய சேவைகளுக்கான செலவுகளை குறைக்கக்கூடாது.

முழு அரச செலவில் 15 வீதத்திற்கும் அதிகமான தொகை இராணுவத்திற்கு செலவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.