புடின் உரையை பாதியிலேயே துண்டித்த ரஷ்ய அரச தொலைக்காட்சி

0
459

பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு விளாடிமிர் புடின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதியில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது.

க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை, தேசபக்தி உணர்வுடன் கோஷங்கள் எழுப்பி புடின் வரவேற்றார்.

ஆனால், அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே பாடல் ஒளிபரப்பானது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “சேவரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு,” காரணமாக பேச்சு தடைப்பட்டதாகக் கூறினார்.

உரையின்போது, உக்ரைனில் தொடர்ந்து “வீரமாகப் போரிட்டதாக” ரஷ்ய அதிபர் தனது படைகளைப் பாராட்டினார்.