தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் காரணமாக நாடு இந்த மட்டத்திலாவது இருக்கின்றது எனவும் அப்படியில்லை என்ற நாடு முற்றாக அழிந்த போயிருக்கும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செய்தவற்றுக்காக நாங்கள் இழப்பீடு செலுத்த நேரிட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி கூறியது போல், சவால்கள் வரும் போது கைவிட்டு ஓடிவிட மாட்டோம்.
சவால்களை எதிர்கொண்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.இது எமக்கு புதிய விடயமல்ல. போர் நடைபெற்ற காலத்திலும் எதிர்க்கட்சிகள் இப்படியே நடந்துக்கொண்டன.
அதனை தற்போதும் செய்கின்றனர். அதற்காக குற்றம் சுமத்த போவதில்லை. எங்களிடம் குறைகள் இருக்கின்றன. தவறுகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.