மீரிகமவில் இருந்து கல்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரை “ஸ்பின் ரைடர் கிளப்” என்ற தனியார் மோட்டார் சைக்கிள் கிளப் ஏற்பாடு செய்த மூன்று நாள் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நிதி நன்கொடை மற்றும் கல்பிட்டியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகம் என்பவற்றுக்காக இந்த அணிவகுப்பை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும் பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் இணக்கப்பாடுகளை மீறியமை காரணமாக இந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள்களில் சுமார் 300 மோட்டார் சைக்கிள்கள் அதிக எஞ்சின் திறன் கொண்டவை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.