பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாகன பேரணி! – அமைச்சர் நாமலுக்கு தொடர்பா?

0
478

கொழும்பு – புத்தளம் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவோ அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமோ எந்த உதவியும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறை அமைச்சகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தனியார் நிறுவனத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று விளையாட்டு அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியானது, நாட்டின் நிலைமையை கருத்திற்கொள்ளாமல் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாகவும், எரிபொருளை வீணாக்குவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்தினர்.

அத்துடன் குறித்த நிகழ்விற்கு பொது மக்களிடமிருந்து பல எதிர்ப்புகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.