டீசல் வழங்குமாறு கோரி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

0
446

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதியில் அமைந்துள்ள திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக டீசல் வழங்குமாறு கோரி சாரதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

குறித்த எரிபொருள் நிலையத்தில் இன்று (17) இரவு 7.45 மணியளவில் டீசல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்துள்ள நிலையில் கேன்களில் டீசல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த சாரதிகளுக்கு கொள்கலன்களில் டீசல் வழங்கமுடியாது என குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து சாரதிகள் வீதிக்கு இறங்கி பிரதான வீதியை மறித்து டீசலை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதன்போது பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸாரின் தலையீட்டில் எரிபொருள் நிலைய முகாமையாளர் உடன் கலந்துரையாடி மீண்டும் டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது

இருப்பினும் குறித்த வீதியில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் டீசல் கொள்வனவு செய்ய வருபவர்களுக்கு ஒருவருக்கு ஒரு கேன்களில் மாத்திரமே டீசல் விநியோகிப்பதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்தனர்இருப்பினும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மட்டுமல்லாது திருகோணமலை நகரில் பெரும்பாலான எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

.