கோட்டாபயநேரலையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ,மின்சாரத்தை துண்டித்து வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய குடும்பஸ்தர்!

0
358

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நேற்று உரையாற்றியிருந்தார்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்சார விநியோகம் நடைமுறைப்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம் இரவு ஜனாதிபதி உரையாற்றும் போது மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, தனது எதிர்ப்பை காட்டும் வகையில் வீட்டிலுள்ள மின்சாரத்தை ஒருவர் தடை  செய்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதியின் உரைக்கு தடை விதித்துள்ளார்.

தென்னிலங்கையில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு உள்ள அதியுச்ச வெறுப்பின் வெளிப்பாடாக இதனை பார்க்க முடியும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்காக நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது நடைபெறும் பாதிப்புகளுக்கு தான் பொறுப்பு இல்லை என்றும், தன்மீது நம்பிக்கை வைத்தால் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது