இலங்கை நாணய வீழ்ச்சிக்கான காரணங்களை முன்னாள் எரிசக்தி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில(Udaya Gammanpila) வெளியிட்டுள்ளார்.
நாணய பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,
1. செயற்கையாக நீண்ட காலத்திற்கு மாற்று விகிதத்தை வைத்திருத்தல்.
2. இறக்குமதி செலவுக்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையே பாரிய வேறுபாடு.
3. பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதங்களை பராமரிப்பது, மக்களை சேமிப்பதற்கு பதிலாக நுகர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது.
4. நாணயம் அதிகமாக அச்சிடப்படுவதால் பொருட்களின் தேவை அதிகரிக்கிறது.
5. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு தேவைப்படும் புதிய திட்டங்களை தொடங்குவதன் மூலம் இறக்குமதி பொருட்களுக்கான தேவை அதிகரிக்கப்படுகிறது.
6. வெளிநாட்டு கடன்களை அதிகம் சார்ந்து இருத்தல்.
7. சர்வதேசப் பணச் சந்தைக் கடன்களுக்கான கடுமையான வெளிப்பாட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம்.
8. வெளிநாட்டு கடனை சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யத் தவறியது
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் இந்த வேளையில் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் கம்மன்பில.