மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹவகுர வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெதகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.