மக்கள் சார்ந்த முக்கிய 3 கேள்விக்கும் பிழையாகவே பதிலளித்துள்ள தென்னிலங்கை அமைச்சர்!

0
396

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கூட சமகால ஆட்சியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு விலைகள் தெரியாமல், தென்னிலங்கை அமைச்சர் ஒருவர் திணறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிங்கள ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

எரிவாயு விலை, டீசல் விலை, பெற்றோல் விலை தொடர்பில் அமைச்சருக்கு எவ்வித விழிப்புணர்வும் இல்லை என தெரியவந்துள்ளது.

தற்போது டீசலின் விலை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் 100 ரூபாய்க்கு மேல் என குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் உங்களுக்கு தற்போதைய விலை தெரியாதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்

பெட்ரோலின் தற்போதைய விலை தொடர்பில் மீண்டும் கேட்டதற்கு,  200 அல்லது 255 ரூபாய் என அமைச்சர் கூறியுள்ளார். அப்படி என்றால் எரிவாயு விலை என வினவிய போது எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் அது 2350 ரூபாய் என பதிலளித்துள்ளார்.

விளீர்கள். நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் அனுபவிக்கும் துன்பம் தெரியவில்லை. பொருட்களின் விலை தெரியவில்லை. அது ஏன்? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.