இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று, இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு, சிறிலங்கா நிதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறும் நிதி அமைச்சர், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இல்லையெனில் மார்ச் 30 ஆம் திகதி சிறிலங்காவால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.