நடால் வெற்றி; சிட்ஸிபாஸ் அதிர்ச்சி தோல்வி!

0
465

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் ரபேல் நடால் வெற்றிபெற்றுள்ளதோடு, ஸ்டெபினோஸ் சிட்ஸிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், பிரித்தானியாவின் டேன் எவாண்சை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ரபேல் நடால், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார். இதேபோல மற்றொரு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஜொன்சன் புரூக்ஸ்பியும், கிரேக்கத்தின் ஸ்டெபினோஸ் சிட்ஸிபாசும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஸ்டெபினோஸ் சிட்ஸிபாஸ், 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற செட்டுகளில் சிறப்பாக விளையாடிய ஜென்சன் புரூக்ஸ்பி, அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்