சுற்றுலா பயணிகளை கவர்ந்து கொள்ள,மத்தள விமான நிலையத்திற்கு அருகாமையில் ஹொட்டல்!அமைச்சரவை அங்கீகாரம்

0
474

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் விமான நிலைய விடுதி அமைத்து செயற்படுத்துவதற்கு இரண்டு காணிகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

மத்தள விமான நிலையம் அமைந்த்துள்ள ஹம்பாந்தோட்ட மிக முக்கியமான சுற்றுலா தளமாகும். அங்கு சில ஹொட்டல்கள் மாத்திரமே இயங்கி வருகின்றன.

குறித்த விமான நிலையத்திற்கு அருகே நட்சத்திர ஹொட்டல் அமைப்பதன் நிலம் சுற்றுலா பயணிகளை இலகுவாக கவர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, விமான நிலையத்தின் வலது பக்கமாக உள்ள இரண்டு நிலங்களை இதற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.