இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் நிதி அமைச்சருக்குமான சந்திப்பு!

0
371

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை(Shri Harsh Vardhan Shringla) சந்தித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று இந்திய புறப்பட்ட பசில் இன்று புதுடெல்லியில் வெளிவிவகார செயலாளரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல(S.R. Attygalle), இந்தியாவிற்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொரகொட(Milinda Moragoda) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே(Gopal Baglay) ஆகியோரும் இந்த சந்திப்பில் நிதி அமைச்சருடன் சென்றுள்ளனர்.

பசிலின் இவ் இந்திய விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்(Dr. S. Jaishankar) மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி(Shri Vikram Misri) உள்ளிட்டோரையும் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளையும் நடாத்த உள்ளார்.