களனி ஆநால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நான்கு இளைஞர்களும் தம்புள்ளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் நவகமுவ பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
21 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் குறித்த இளைஞர் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.