ஸ்ரீலங்காவில் வெடித்த பெரும் சர்ச்சை! பிரதமர் மஹிந்த எடுத்துள்ள திடீர் முடிவு

0
461

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பெரும் சர்ச்சைக்கு பிரதமர் மஹிந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம்.

குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும்.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றார்.