விஷாலின் அதிரடித் திரைப்படமான ‘சக்ரா’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

0
1207

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகளில் படங்கள் வெளியாகாமல் ஓ.ரி.ரி. தளத்தில் வெளியிடப்பட்டுவந்தன. இந்நிலையில், தற்போது ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல படங்களின் குழுவினர் தமது முடிவை மாற்றியுள்ளனர்.

அந்தவகையில், விஷாலின் ‘சக்ரா’ திரைப்படமும் ஓ.ரி.ரி. தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அத்துடன், படம் பெப்ரவரி 19ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சக்ரா வெளியாகவுள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகளை விஷால் விரைவில் தொடங்கவுள்ளார்.