பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றது.
இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் பிப்ரவரி 1ம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.