உடம்பை குறைத்து ஸ்லிம்மான நித்யா மேனன்

0
564

ஓகே கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நித்யா மேனன். மலையாள தேசத்திலிருந்து வந்திருந்தாலும், கேரளத்தில் வைத்திருக்கும் அளவு தமிழகத்திலும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆஃப் லவ், அன்வர், தமிழில் 180, வெப்பம், உருமி என நடிக்க ஆரம்பித்தவர், தற்போது சைக்கோ, மெர்சல், 24, இருமுகன் என முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் மிஷன் மங்கள்யான் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

நித்யா மேனன் அடிக்கடி சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ள அவர், அதில் வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து சோபாவில் அமர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், உடம்ப குறைச்சு கும்முன்னு இருக்காரே என வர்ணித்து வருகின்றனர்.