வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நேற்றய தினம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.
அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி உள்ளிட்ட உயர் சுகாதார அதிகாரிகள்முன்மாதிரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.