பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரி ஏராளமான வெளிநாட்டினர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அதன் படி பிரித்தானியாவின் Kent-ல் Napier Barracks-ல் தடுத்து வைக்கப்பட்டு, தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் இருந்த முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Folkeston பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான தளத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த முகாமின் சாப்பாட்டு அறையில் ஏற்பட்ட சிறிய சலசலப்பு, அதன் பின் பூதாகரமாக வெடித்ததே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என விசரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்து காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.