இலங்கை கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் : காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் போராட்டம்

0
464

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் இன்று(29) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களின் சக ஊழியர்களுடன் இணைந்து எதிர்ப்பாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றனர்.

மதிய உணவு நேரத்தில் துறைமுகத்தை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் கொழும்பு – மாத்தறை பிரதான வீதியில் துறைமுக நுழைவாயிலை மறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கறுப்புக் கொடி கட்டப்பட வேண்டும் என எதிர்ப்பாளர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.