முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூசத் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும்.
தைப்பூசத் திருவிழா இன்று (28.1.2021) நடக்கிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதணையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், காலை10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மற்ற காலங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகளால் சுவாமி அலைவாயுகந்த பெருமான் உள்பிரகாரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
தைப்பூச திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலில் குவிந்து வருகின்றனர்.