கோலி, தமன்னாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0
485

ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ள ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்கள், பண இழப்பை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் மிருகங்களாக மாறிவிட்டன. இந்த சூதாட்ட விளையாட்டுகளால் ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.

இளைஞர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

பிற மாநிலங்களைப் போன்று கேரளாவிலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா, நடிகர் அஜு வர்க்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.