இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,01,193 ஆக அதிகரித்துள்ளது.
ற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,847 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,301 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,73,606 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு தற்போது 1,73,740 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 23,55,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 43 லட்சத்து 38 ஆயிரத்து 773 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று 7,25,653 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.