நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்; கடைகள் சூறையாடல்!

0
582

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.

போராட்ட காரர்கள் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம், கிழக்கில் அமர்ஸ்ஃபோர்ட் மற்றும் மாஸ்ட்ரிச்சிற்கு அருகிலுள்ள சிறிய தெற்கு நகரமான கெலீன் ஆகிய இடங்களில் பொலிஸாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடி பொருட்களை திருடி சென்றதோடு வீதியில் நின்ற வாகனங்களை தீவைத்து எரித்தனர். இந்த வன்முறையின் போது கொரோனா பரிசோதனை மையம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்களுக்கு பொலிஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

நெதர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,017- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,52,950- ஆக உள்ளது.