இலங்கை யாழ் நல்லூரில் நாளை சிவகுரு ஆதீனப்பிரிவுகள் அங்குரார்ப்பணமும் வகுப்புக்கள் ஆரம்பமும்

0
436

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற நல்லூரில் சிவகுரு ஆதீனப்பிரிவுகள் அங்குரார்ப்பணமும், வகுப்புக்கள் ஆரம்பமும், மண்டபத் திறப்பு விழாவும் நாளை இடம்பெறவுள்ளது.

குருவாரமும் பௌர்ணமியும் கூடிவரும் தைப்பூச நன்னாளில், தைத்திங்கள் 15ஆம் நாள் 28.01.2021 அன்று, இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் காலை 10.00 மணிக்கு நந்திக்கொடி ஏற்றல், அலுவலகம் திறத்தல், ஆதீன மண்டபம் திறத்தல் ஆகியன இடம்பெற உள்ளன.

அதனை தொடர்ந்து சிவகுரு ஆதீனப்பிரிவுகள் (சிறுவர், இளையோர், நடுவயதினர், மூத்தோர்) அங்குரார்ப்பணமும் அனைவருக்குமான வகுப்புக்கள் ஆரம்பமும் ஏடு தொடக்கலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காலத்திற்கேற்ப சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர் .

மேலும் நிகழ்வினில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.