50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி : மூவரின் நிலை கவலைக்கிடம்

0
486

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 03 பேர் படுகாயத்திற்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

அத்துடன் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.