வாட்ஸ்அப் விவகாரம் இவ்வளவுதாங்க; ஒன்றுமே இல்லை பயம் தேவை இல்லை; வெளியான தகவல்!

0
423

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது கொள்கையை மாற்ற உள்ளதாக கூறி, பல ஊடகங்கள் திரிவு படுத்தப்பட்ட செய்திகளை பரப்பியுள்ளது. இதில் தமிழ் ஊடகங்கள் வேறு இந்த செய்திகளை போட்டு தமிழர்களை பயமுறுத்தவே. பல தமிழர்கள் தற்போது சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகளை டவுன் லோட் செய்துள்ளார்கள். ஆனால் என்ன வேடிக்கை என்றால், இந்த செயலிகள் வாட்ஸ் ஆப் போல, பல செயல்பாடுகளை கொண்டது அல்ல.

சர்சைக்கு என்ன காரணம் ?

நாம் எமது மோபைல் போனில் வைத்திருக்கும் வாட்ஸ் ஆப் போன்ற பல செயலிகள். அடிக்கடி தமது கொள்கைகளை மாற்றுவது உண்டு. இவர்கள் தற்போது பேஸ் புக் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ள நிலையில். வாட்ஸ் ஆப் வைத்திருப்பவர்களின் விபரங்களை நாம் பேஸ் புக் நிறுவத்தோடு ஷியார் செய்வோம் என்பது தான் அந்த எச்சரிக்கை. எம்மில் 90 சதவிதமானவர்கள் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக் வைத்திருக்கிறார்கள். இதில் என்ன சர்சை இருக்கிறது ?

அதுவும் சொல்லப் போனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு சில மாற்றங்களை தான் வட்ஸ் ஆப் செய்கிறது. மீதம் உள்ள நாடுகளில் தான் பெரும் மாற்றங்கள் செய்கிறது. இந்த நிலையில் ஏதோ வங்கி அட்டையை திருடி அதில் உள்ள இலக்கங்களை வாட்ஸ் ஆப் அறிந்து விட்டது என்ற கணக்காம மக்கள் சிந்தித்து. உடனே வேறு செயலிகளுக்கு மாறி வருவது. மக்கள் தேவையற்ற அச்சத்தில் இருப்பதை காட்டுகிறது.

ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்த பிழை என்னவென்றால். அவர்கள் தமது மாற்றம் பற்றி தெளிவாக குறிப்பிடாதமை மட்டுமே. இவற்றை தான் மாற்றுகிறோம் என்று தெளிவாக கூறி இருந்தால் இந்த குழப்பம் நேர்ந்து இருக்காது. வாட்ஸ் ஆப் பாவிக்கும் 7.5 மில்லியன் நபர்கள் சிக்கனலை பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்றும். சுமார் 25 மில்லியன் நபர்கள் டெலிகிராமுக்கு மாறியுள்ளார்கள் என்றும் அறியப்படுகிறது.

ஆனால் வாட்ஸ் ஆப்பிடம் சுமார் பில்லியன் கணக்கான வாசகர்கள் இன்றும் உள்ளார்கள் என்பதே உண்மை. எனவே டேம்ஸ் & கண்டிஷனை நன்றாக வாசித்துப் பாருங்கள். பின்னர் மாறுவதா விடுவதா என்று நீங்களே தீர்மாணிக்கலாம்.