இலங்கையில் இளைஞர் ஒருவரை அடித்து கொன்று விட்டு கையை வெட்டி சந்தி பகுதியில் வீசிச்சென்ற கொலையாளிகள்!

0
508

மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் கையை துண்டித்து எடுத்துச் சென்று சந்தி பகுதியில் வீசிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இனந்தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

அத்துடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள ,மிடியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.