யாழில் இருந்து 19 மாணவர்கள் மன கணித போட்டியில் பங்கேற்பு!

0
166

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனக்கணித போட்டி எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள மலேசியாவில் இடம்பெறவுள்ளது. அதேவேளை குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.