உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான இராமர் சிலை ஒன்றை உருவாக்கினர். ஒரு இலட்சம் மதிப்பிலான 1,5,10 ரூபாய் நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும், இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. லக்னோவில் உள்ள சிறப்பு அங்காடியில் உத்தரப்பிரதேசத்தின் பிரதி அமைச்சரினால் இந்த சிலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.