18 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

0
474

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சவப்பெட்டி மற்றும் மலர்வளையம் ஆகியவற்றை கொண்டுவந்துள்ளனர்.

அண்மையில் றம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற அரச எரிப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் நினைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி சவப்பெட்டிக்கு தீ வைத்த போராட்டகாரர்கள், உயிரிழந்த நபருக்கு நீதிகோரி போராட்டம் நடத்தியிருந்தனர்.