மாத்தறை,வெலிகம பிரதேசத்தில் கைத்தொலைபேசி தொடர்பாக தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 16 வயது சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியாவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.