150வது வருட ஆடிவேல் வெள்ளிரத பவனி: முருகனிடம் ஆசி பெற்றார் மகிந்த ராஜபக்ச

0
115

பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயிலிலிருந்து கடந்த 20ஆம் திகதி காலை 150வது வருட ஆடிவேல் விழா வெள்ளிரத பவனி ஆரம்பமானது.

வெள்ளிரத பவனியில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் கூடிய தேர் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலயத்திற்கு வருகை தந்து வழிபட்டார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பட்டதுடன் குருமார்கள் ஆசி வழங்கியிருந்தனர்.