பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சமீபத்தில் மாணவி ஒருத்தி, புலம்பெயர்ந்த பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த துயர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு 14 வயது மாணவி, கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சிலுள்ள Tonneins என்ற நகரத்தில், வனேசா என்னும் 14 வயது மாணவி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது, Romain Chevrel (31) என்னும் நபர் வனேசாவை வன்புணர்ந்து, கழுத்தை நெறித்துக்கொன்று, அவளது உடலை ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
தான் திட்டமிட்டு இந்தக் குற்றச்செயலைச் செய்யவில்லை என்று கூறியுள்ள Romain, வெறும் பாலியல் நோக்கம் காரணமாக நடந்த குற்றம் அது என்று கூறியுள்ளார்.
தான் தனது காரில் அமர்ந்து கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததாகவும் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வனேசாவைக் கண்டதும், அவளை இழுத்துச் சென்று வன்புணர்ந்து கொலை செய்துவிட்டதாகவும் Romain வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதை தலைக்கேறியதால், அடையாளம் தெரியாமல் சொந்த மகளிடமே மோசமாக நடந்துகொண்டவர்கள் குறித்துக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். Romainஉடைய குற்றச்செயலுக்கு போதை காரணமாக இருக்குமா என்றால், அவர் தனக்கு 15 வயது இருக்கும்போதே சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் என ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதுபோல் பள்ளிச் சிறுமிகள் தாக்கப்படுவது பிரான்சில் அபூர்வம் என்பதால், பாரீஸில் புலம்பெயர்ந்த பெண் ஒருவரால் சிறுமி ஒருத்தி கொலை செய்யப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.