பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த போது சிக்கிய 3 மாணவிகள்

0
571

பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த 14 வயதான 3 மாணவிகள் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ஆனமடுவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் நடந்துள்ளது. தனது தந்தை பாவிக்கும் சிகரெட் ஒன்றை மாணவியொருவர் பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதனை மேலும் இரண்டு நண்பிகளுடன் சேர்ந்து பாடசாலை கழிப்பறைக்குள் புகைத்துள்ளார். தகவலறிந்து ஆசிரியர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டனர்.

மாணவிகள் பாடசாலையில் இருந்து சில நாட்கள் இடைநிறுத்தப்பட்டு பின்னர் பெற்றோர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அறிவுரை கூறப்பட்டு மாணவிகள் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை கழிப்பறைக்குள் 3 மாணவிகளின் முகம் சுழிக்கும் செயல்! | The Action Of3 Students In The School Toilet