1000 கடற்படையினர் சரணடைந்தனர்: ரஸ்யாவின் கூற்றை மறுக்கிறது உக்ரைன்

0
591

உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர் சரணடைந்துள்ளதாக ரஸ்யா கூறுகிறது,

இதனை ரஸ்ய ஊடகங்களும் காணொளியாக வெளியிட்டுள்ளன. எனினும் உக்ரைன் இதை மறுக்கிறது.

நகரின் துணை முதல்வரின் கூற்றுப்படி அங்கு உக்ரைனிய துருப்புக்கள் இன்னும் சண்டையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் இல்லாத இரண்டு பகுதிகளில் சண்டை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஸ்யாவினால் 2014இல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்திற்கு இணைக்கப்பட்ட நிலப் பாதையை நிறுவ முயல்வதால் ரஸ்யாவிற்கு மரியுபோல் ஒரு முக்கிய இலக்காக அமைந்துள்ளது.

இதேவேளை மரியபோலில் ஏற்பட்ட சேதங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.