உலக நீர் விளையாட்டுப் போட்டிகள் பெப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் 100 வயது ஈரானிய முக்குளிப்பாளர் தகி அஸ்காரி போட்டியிடுகிறார். போட்டியில் களமிறங்கும் ஆக மூத்த வீரர் எனும் பெருமை இவரைச் சேரும். 1951ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அஸ்காரி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.