நட்பின் பெருமையை அழகாக பேசிய ’என்றென்றும் புன்னகை’: திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு

0
172

நட்பின் பெருமையை பேசிய தமிழ் சினிமாக்கள் பல வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் ‘என்றென்றும் புன்னகை’. ஜீவா, வினய் ராய், சந்தானம், திரிஷா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தனது அம்மாவினால் பெண்களையே பிடிக்காத ஜீவாவிற்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் இடையேயான சுவாரசியமான தருணங்கள் தான் இந்தப் படத்தின் கதை. நண்பர்களின் முக்கியத்துவத்தையும் காதலின் முக்கியத்துவத்தையும், தந்தை பாசத்தையும் சரிசமமாக காட்டிய படம் தான் என்றென்றும் புன்னகை.

Oruvan

அகமது இயக்கிய இந்த படத்துக்கு இசையில் தனது தரமான பங்களிப்பை கொடுத்திருப்பார் ஹாரீஸ் ஜெயராஜ். என்றென்றும் புன்னகை திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி வெளியானது. சூப்பர் ஹிட்டான இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.