புதிய காதலனை திருமணம் செய்ய பழைய காதலனுடன் 03 நாட்கள்; இலங்கையில் சம்பவம்

0
221

புளத் சிங்களவில் புதிய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பழைய காதலனிடம் அனுமதி பெறச் சென்று 03 நாட்களை அவருடன் கழித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

23 வயதான யுவதியொருவரே தனது 24 வயதான பழைய காதலனிடம் அனுமதி பெறச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியின் தாயார் தனது மகள் காணாமல் போயுள்ளதாக நேற்று புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பிரகாரம் இந்தத் தகவல் அனைத்தும் தெரியவந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய காதலனை திருமணம் செய்து கொள்ள பழைய காதலனுடன் 03 நாட்களை கழித்த யுவதி | 03 Days With Old Lover To Marry New Lover

காதலித்து வந்த சிறுமி

புலத்சிங்களவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த யுவதி புலத்சிங்களவில் வசிக்கும் இளைஞன் ஒருவரை சில காலமாக காதலித்துள்ளார்.

சில காலங்களுக்குப் பிறகு அந்த உறவு துண்டிக்கப்பட்டு மற்றொரு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கி உள்ளார்.

அதற்கு இரு தரப்பினரும் சம்மதித்த நிலையில் இளம் பெண் திடீரென தனது வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய காதலனை திருமணம் செய்து கொள்ள பழைய காதலனுடன் 03 நாட்களை கழித்த யுவதி | 03 Days With Old Lover To Marry New Lover

பொலிஸார் விசாரணையில் தெரிய வந்தவை

இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவ் யுவதி மூன்று நாட்களுக்கு பின்னர் யுவதி வீடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயின் முறைப்பாட்டின் பிரகாரம் புலத்சிங்கள பொலிஸார் பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன விதானகே நடத்திய விசாரணைகளுக்காக யுவதியை அழைத்துள்ளார்.

இதன்படி பழைய காதலனையும் புதிய காதலனையும் பொலிஸ் நிலையம் வரவழைத்து நீண்ட விசாரணையின் பின்னர் புதிய காதலன் யுவதியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து சம்பவம் சுமுகமானதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.