கரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் இருந்து நேற்று முன்தினம் (27) அவசர அவசரமாக சென்னைக்குச் சென்ற விஜய் தற்போது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு செல்லலாம் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
