விஷக் காளான் கொண்டு உறவினர்களை கொன்ற பெண்!

0
17

அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் கொடுத்து உறவினர்களள் கொன்றதாக குற்றம் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் குறித்த பெண் குற்றவாளி என்பது குநிரூபணமாகியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எரின் பாட்டர்சன் என்ற 50 வயது பெண் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2023 ஜூலை 29ஆம் திகதி விக்டோரியா மாநிலத்தின் மொர்வெல் (Morwell) நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பீஃப் வெல்லிங்டன் (Beef Wellington) என்ற உணவில் மரணவிஷமுள்ள களான்கள் (death cap mushrooms) பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் டான் பாட்டர்சன் (70) – எரின் பாட்டர்சனின் முன்னாள் மாமா, கெயில் பாட்டர்சன் (70) – முன்னாள் மாமி, ஹெதர் வில்கின்சன் (66) – கெயிலின் சகோதரி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் பாஸ்டர் இயான் வில்கின்சன் – ஹெதரின் கணவர் – பல வார சிகிச்சைக்கு பின் உயிரிழப்பில் இருந்து மீண்டுள்ளார்.

எரின் பாட்டர்சன், விஷ காளான்கள் உலகில் மிகவும் ஆபத்தான என கருதப்படும் “death cap” வகையை தனிப்பட்ட முறையில் சேகரித்து, உணவுக்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. அதிகமாக கவனிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நீதிமன்ற வழக்குகளில் ஒன்றாக திகழ்ந்த இந்த வழக்கில் 9 வாரங்களுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

முன்னாள் கணவர் சைமன் பாட்டர்சனும் உணவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் இறுதி நேரத்தில் வரவில்லை என்பதாலும் அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுகள் வழக்குத் தொடங்கும் முன் வாபஸ் பெறப்பட்டன.