வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

0
294

வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதன் தாக்கம் காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.