யாழ்.மக்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல்!

0
475

யாழ் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (28) நடைபெற்ற நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக இழுபறிநிலையில் காணப்பட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியின் கட்டுமான பணிக்கான மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் கட்டுமான பணிக்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் 100,000km வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பமாகவுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதிக்கான கட்டுமானபணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.