யாழ் இளம் குடும்பஸ்த்தர் தவறான முடிவினால் உயிரிழப்பு !

0
457

வடமராட்சி புனிதநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜீவேந்திரன் ஜீவன்ராஜ் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே தவறான முடிவெடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.