முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு துபாயில் உள்ள ஒரு பாதாள உலகத் தலைவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து டிரான் அல்ஸ் அனைத்து பொலிஸ் சிறப்புப் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும், கொலை மிரட்டல் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வர உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், உளவுத்துறை நிறுவனங்கள் பாதாள உலகத் தலைவர்களிடமிருந்து கொலை மிரட்டல்களைக் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டிரான் அல்ஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அத்தகைய மிரட்டல்களை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.