மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக திலித் ஜயவீர நியமிப்பு!

0
284

இலங்கையின் பிரதான ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான திலித் ஜயவீர மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில் அவர் பகிரங்க அரசியலுக்கு வருவதை உத்தியோபூர்வமாக பதிவு செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார இதற்கு முன்னர் மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வந்தார். தற்போது அவர் கட்சியின் சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் சின்னர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அரசியல் கட்சியை விலை கொடுத்து வாங்கியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.